வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Date:

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கடும் காற்று மற்றும் பலத்த மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

திறந்தவெளிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நீர்நிலைகளில் இருந்து விலகி இருக்கவும், கம்பி தொலைபேசிகள், மின் சாதனங்கள் மற்றும் மிதிவண்டிகள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது. விழுந்த மரங்கள் மற்றும் மின் இணைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

spot_imgspot_img

More like this
Related

நிதி முறைகேடு குற்றச்சாட்டில் தொழிற்சங்கவாதி ஆனந்தபாலித கைது!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் 3.11 மில்லியன் ரூபா பெறுமதியான மேலதிக நேரக்...

மேலும் 3 புதிய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம்

1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின்...

ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக டெய்சி மார்ட்டின் அறிவிப்பு

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடனான 14 ஆண்டு கால திருமண வாழ்க்கையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்