கைதான தவெக நிர்வாகிகளுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

Date:

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயி​ரிழந்த சம்​பவத்​தில் கைது செய்​யப்​பட்ட தவெக நிர்​வாகி​கள் 2 பேரை 15 நாள் நீதி​மன்​றக் காவலில் வைக்க நீதிபதி உத்​தர​விட்​டார்.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இது தொடர்​பாக கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் வி.பி.ம​தி​யழகன், பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செய​லா​ளர் நிர்​மல்​கு​மார் ஆகியோர் மீது கரூர் நகர போலீ​ஸார் 5 பிரிவு​களின் கீழ் வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வந்​தனர். இதில் தலைமறை​வாக இருந்த மாவட்​டச் செய​லா​ளர் மதி​யழகன், அவருக்கு அடைக்​கலம் கொடுத்த கட்சி நிர்​வாகி பவுன்​ராஜ் ஆகியோரை திண்​டுக்​கல் மாவட்​டம் குஜிலி​யம்​பாறை​யில் தனிப்​படை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர்.

பின்​னர் அவர்​களை கரூர் குற்​ற​வியல் நீதி​மன்​றத்​தில், நீதிபதி பரத்​கு​மார் முன்​னிலை​யில் நேற்று ஆஜர்​படுத்​தினர். அப்​போது நீதிபதி பரத்​கு​மார் தவெக​வினரிடம், “நீங்​கள் உங்​கள் தலை​வரை முதல்​வர், மற்ற தலை​வர்​களைப்​போல நினைத்து விட்​டீர்​களா? அவர் ஒரு ஸ்டார். அவரைப் பார்க்க ஏராள​மானோர் வரு​வார்​கள். அதை கணிக்க தவறி​விட்​டீர்​களா?” என்பன உள்​ளிட்ட பல்​வேறு கேள்வி​களை எழுப்​பி​னார்.

அப்​போது, போலீ​ஸார் தங்​களை ஒரு​மை​யில் பேசுவ​தாக நீதிப​தி​யிடம் தவெக​வினர் முறை​யிட்​டனர். அதற்கு நீதிப​தி, “அவர்​களை அடிக்​கவோ, ஒரு​மை​யில் பேசவோ கூடாது” என போலீ​ஸாருக்கு அறி​வுறுத்​தி​யதுடன், இரு​வரை​யும் 15 நாள் நீதி​மன்ற காவலில் வைக்க உத்​தர​விட்​டார். இதையடுத்​து, இரு​வரும் திருச்சி மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

spot_imgspot_img

More like this
Related

உணவக உரிமையாளர் சுட்டுககொலை: 2 பேர் கைது!

பெல்லன்விலவில் உணவக உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர்,...

இந்தியா தப்பிச்சென்றவர்களுக்கு வத்தளை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்பு?

சட்டவிரோதமாகப் படகில் தனுஷ்கோடி சென்ற இரு இலங்கையர்களும் அண்மையில் வத்தளையில் இடம்பெற்ற...

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ தெலுங்கு படம் அல்ல

தமிழ், தெலுங்​கில் வெற்​றி​பெற்ற ‘லக்கி பாஸ்​கர்’ படத்​துக்​குப் பிறகு, வெங்கி அட்​லூரி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்