ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டம் அமுலுக்கு

Date:

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார்.

இதன்மூலம் ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டம் உடன் அமுலுக்கு வந்துள்ளது.

ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் 2வது வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு இன்று (10) பிற்பகல் இடம்பெற்றது.

இந்த வாக்கெடுப்பில் பிரேரனைக்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 1 வாக்கும் அளிக்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மாத்திரமே ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்திருந்தார்.

இதன்படி ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேறியுள்ளது.

நேற்றைய தினம் இது தொடர்பான விவாதம் இடம்பெறவிருந்தது.

எனினும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இன்று முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரையான காலப்பகுதியில் குறித்த விவாதம் இடம்பெற்றிருந்தது.

இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் சரத்துகள் அரசியலமைப்பின் எந்தவொரு உள்ளீடுகளுக்கும் முரணானது இல்லை என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் நேற்று பாராளுமன்றில் வௌிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் குதிரை பேரம் தீவிரம்: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் பல்டி!

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா...

துப்பாக்கி மீட்பு

பொலன்னருவை சோமவதி சரணாலயத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி...

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்