மட்டக்களப்பில் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் மீட்பு!

Date:

மட்டக்களப்பு ஓட்டுபள்ளிவாசல் பின்பகுதியில் உள்ள பழைய பாடசாலை காணியில் புதைக்கப்பட்டிருக்கு ஆயுதங்களளை தேடி இன்று செவ்வாய்க்pழமை (09) இராணுவ புலனாய்வு பிரிவினர் விசேட அதிரடிப்படையினர் பொலிசாருடன் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டதில் 4 கைக்குண்டுகளை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொலன்னறுவை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் ஏறாவூர் ஓட்டுபள்ளிவாசல் குறுக்கு வீதியில் பள்ளிவாசலுக்கு பின்பகுதியில் உள்ள முன்னாள் அகமட் பரீட் வித்தியாலய பகுதியில் அகழ்வதற்கான நீதிமன்ற உத்தரவை பெற்று இன்று செவ்வாய்க்கிழமை ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் லியனகே தலைமையில் விசேட அதிரடிப்படையினர் இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து பலத்தபாதுகா ப்புக்கு மத்தியில் அகழ்வு பணி இடம்பெற்றது.

இதன்போது அங்கு ஒரு பிளாஸ்ரிக் வாளியில் பொதி செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் ஜே.ஆர் ரக 4 கைக்குண்டுகளை மீட்டனர். இவ்வாறு புதைக்கப்பட்ட வாளி யூஸ் கலவை பொதி செய்யப்பட்ட வாளி எனவும் இந்த யூஸ் கலவை 2012 உற்பத்தி செய்யப்பட்டதாகவும் 2014 அதன் காலவதியாகயான வாளியில் 2012 க்கும் 2020 க்கும் இடைப்பட்ட காலத்தில் நிலத்தில் பாதுகாப்பாக புதைக்கப்ட்டிருப்பதாக பொலிசார் கண்டுபித்துள்ளனர்.

இதனை தொடரந்து அகழ்வு பணி நிறுத்தப்பட்டதுடன் மீட்கப்பட்ட கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையின் கொண்டு சென்று சோதனையின் பின்னர் அதனை பவுக்கமுடியுமா அல்லது அழிக்க வேண்டுமா தீர்மானித்த பின்னர் அது தொடர்பாக நீதிமன்றிற்கு அறிக்கை சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசர் மேற்கொண்டு வருகினன்றனர்.

-கனகராசா சரவணன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேச்சுவார்த்தையில் அமெரிக்கா அளவுக்கு அதிக நிபந்தனைகள் விதிக்கிறது: ஈரான் தகவல்!

இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தானில் ஈரானிய மற்றும் அமெரிக்க...

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி அகற்றலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்: அமெரிக்க இராணுவம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான "சூழ்நிலைகளை அமைக்கும்" பணியைத் தொடங்கியுள்ளதாகவும், இரண்டு...

ஹோர்முஸ் நீரிணையை கடந்த அமெரிக்க போர்க்கப்பல்கள்!

ஈரானுடனான போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, இரண்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஹோர்முஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்