பேருந்தில் பல்கலைக்கழக மாணவியின் முதுகை உரசிய பின் இருக்கைக்காரருக்கு நேர்ந்த கதி!

Date:

பயணிகள் பேருந்தில் பல்கலைக்கழக மாணவியை, பின் ஆசனத்தில் அமர்ந்திருந்து துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை கறுவாத்தோட்டம் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ஹொரணையில் இருந்து கொழும்புக்கு தனியார் பேருந்தில் பயணித்த 27 வயது பல்கலைக்கழக மாணவி ஒருவர், பின்னால் அமர்ந்திருந்த சந்தேக நபர் பல சந்தர்ப்பங்களில் அவரது முதுகில் ரகசியமாக அழுத்தியதால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்ட பின்னர் பொலிஸாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். புகார்தாரர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் 27 வயது இளங்கலை பட்டதாரி என்று பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, புகார்தாரர் தனியார் பேருந்தில் ஹொரணையில் இருந்து கொழும்புக்கு பயணித்தபோது, ​​அவருக்கு நேராக பின்னால் அமர்ந்திருந்த சந்தேக நபர், பல சந்தர்ப்பங்களில் தகாத முறையில் அவரது முதுகில் தொட்டு அழுத்தினார்.

பாதிக்கப்பட்ட பெண் பேருந்தின் உள்ளே குரல் எழுப்பி என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தியபோது, ​​பேருந்தில் பயணித்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தர“ சந்தேக நபரைப் பிடித்து கறுவாத்தோட்டம் பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கொழும்பு தலைமை நீதவான், சந்தேக நபருக்கு தலா 200,000 ரூபாய் வீதம் இரண்டு சரீரப் பிணைகளில் பிணை வழங்கியதுடன், இந்த சம்பவம் தொடர்பான வழக்கை டிசம்பர் 1 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...

முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவையில் ஈடுபட குறைந்தபட்ச வயது 40: அரசு திட்டம்!

முச்சக்கர பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக...

களுவாஞ்சிக்குடி விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்