வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு

Date:

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று (செப்.4) இயக்குநர் வெற்றிமாறன் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு சிம்பு படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி மாலை 6 மணியளவில் தயாரிப்பாளர் தாணு, தனது எக்ஸ் தளத்தில் இப்படம் குறித்த சிறிய வீடியோ பதிவின் மூலம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனை சிம்புவும் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து உறுதிப்படுத்தி இருக்கிறார். இந்தப் படத்தை ‘வி கிரியேஷன்ஸ்’ சார்பில் தாணு தயாரிக்கார்.

சிம்பு நடிக்க இப்படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்றை படமாக்கியுள்ளார் வெற்றிமாறன். அதனை முழுமையாக வெளியிடாமல் ஒரு சிறிய பகுதியை மட்டுமே வெளியிட்டுள்ளார்கள். இப்படத்தில் ‘வடசென்னை’ படத்தில் நடித்தவர்களில் தனுஷை தவிர பலர் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்புவுடன் நடிக்கவுள்ளதை வெற்றிமாறன் உறுதிப்படுத்தி இருக்கிறார். அது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை உறுதி செய்துள்ளது.

சிம்புவின் சம்பளம் பிரச்சினையால் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது அறிவிக்கப்பட்டு இருப்பதால், சிம்புவிடம் நடைபெற்ற சம்பளப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவுற்றதாக தெரிகிறது. இதன் படப்பிடிப்பு உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முன்னணி பதிப்பாளர் கொடகே காலமானார்

கோடகே பதிப்பகத்தின் நிறுவனர் தேசபந்து சிறிசுமன கொடகே நேற்று (29) காலமானார். அவர்...

எரான் விக்ரமரட்னவை கட்சியிலிருந்து விலகக்கோருகிறது ஐக்கிய மக்கள் சக்தி!

இலங்கை கிரிக்கெட்டின் உருமாற்றக் குழுவின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள்...

கடன் பணம் மாயம்: பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ள ஜனாதிபதி

வியாழக்கிழமையன்று பொது நிதிக் குழுவின் (COPF) முன் ஆஜராகத் தன்னால் இயலாது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்