பெருந்தொகை கஞ்சாவுடன் யாழ் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் கைது!

Date:

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிசார் பெருந்தொகை கஞ்சாவுடன் இருவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

இன்று (11) மதியம் 2 மணியளவில் அறுகுவெளி பகுதியில் கஞ்சாவுடன் இருவரையும் பொலிசார் கைது செய்தனர்.

படகில் கொண்டுவரப்பட்டு இறக்கப்பட்ட கஞ்சாவை பற்றைக்காட்டுக்குள் மறைத்து வைத்திருந்தபோது, பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அந்த பகுதியை சுற்றிவளைத்து இருவரையும் கைது செய்தனர். 126 பொதிகளில் கஞ்சாவும் மீட்கப்பட்டது. இது 200 கிலோகிராமுக்கு அதிகமான நிறையுடையதாக இருக்கலாமென கருதப்படுகிறது.

மீட்கப்ட்ட கஞ்சாவின் நிறையை கணக்கிட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் சுலக்சன் என்ற வர்த்தகரும் கைதானார். அவர் சமூக செயற்பாட்டாளர் என கூறி வந்ததுடன், கடந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார். கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அவர் சுயேச்சைக்குழுவொன்றையும் களமிறக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது வாக்குப் பதிவு

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது....

இந்துக்கள் அல்லாதவர்கள் இந்த கோயிலுக்குள் நுழைவதென்றால் பசு சாணம், சிறுநீர் உட்கொள்ள வேண்டும்!

உத்​த​ராகண்​டில் சார் தாம் யாத்​திரை தொடங்​கி​யுள்ள நிலை​யில், இந்து அல்​லாதவர்​கள் கோயிலுக்​குள்...

ஆசிய கடற்பரப்பில் 3 ஈரானிய கப்பல்களை இடைமறித்துள்ள அமெரிக்க கடற்படை

ஆசியக் கடற்பரப்பில் ஈரான் கொடியுடன் சென்ற குறைந்தது மூன்று எண்ணெய்க் கப்பல்களை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்