யாழ் விபத்தில் இளைஞன் பலி

Date:

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் நேற்று (07) இரவு நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆவரங்கால் மேற்கு, புத்தூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் பரிஷ்ணன் அஜய் உயிரிழந்தார்.

அவருடன் பயணித்த மற்றொரு இளைஞர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புத்தூர் கலைமதி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கரப்பந்தாட்டப் போட்டியைப் பார்த்துவிட்டு, இரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பருத்தித்துறை வீதியில் உள்ள புத்தூர் சந்திக்கு அருகாமையில் மின்கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்தில் பலத்த காயமடைந்த பரிஷ்ணன் அஜய், அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அங்கு உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

மற்றைய இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் புதிய மனு

பிரச்​சா​ரத்​தின்​போது தனது ​படத்தை பயன்​படுத்​த தடை கோரி பாமக நிறு​வனர் ராம​தாஸ்...

இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம்; செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் திருப்பித்தர ஒப்புக்கொண்டது: ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மத்திய கிழக்கைப்...

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்