மூதூர் விபத்தில் இளைஞன் பலி

Date:

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் சந்தியில் கார் மற்றும் டிப்பர் வாகனங்கள் மோதியதில் காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்தவர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (08) காலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காரில் பயணித்த தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஹினாயத்துல்லாஹ் ஜெம்சித் என்பவர் உயிரிழந்துள்ளார்.

காரில் பயணித்தவர்கள் தோப்பூரிலிந்து மன்னாருக்கு வேலை நிமித்தமாக சென்று கொண்டிருந்தபோது எதிர்திசையில் வந்த டிப்பர் வாகனத்துடன் மோதியதிலே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...

ஈரானை குறிவைத்து புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா

ஹோர்முஸ் ஜலசந்தியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை ஈரான் மீண்டும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்