தொழில் அதிபரை மயக்கி நகைகள் திருட்டு: இளம்​பெண் நண்பருடன் கைது

Date:

தொழில் அதிபரை மயக்கி நகைகளைத் திருடிய இளம்​பெண் கூட்​டாளி​யுடன் கைது செய்​யப்​பட்​டார். சென்​னை, ஆவடி பகு​தி​யைச் சேர்ந்​தவர் மணி. தொழில் அதிப​ரான இவர் குடும்​பத்​துடன் வசிக்​கிறார். கடந்த மாதம் 27-ம் தேதி, பெண் தோழி ஒருவருடன் தேனாம்​பேட்​டை​யில் உள்ள ஓர் ஓட்​டலில் அறை எடுத்து தங்​கி​னார். மறு​நாள் காலை எழுந்து பார்த்​த​போது, அந்த பெண்ணை​யும் காண​வில்​லை. அவர் அணிந்​திருந்த 10 பவுன் தங்​கச் சங்​கி​லியை​யும் காண​வில்​லை.

அதி​களவு மது ஊற்​றிக் கொடுத்து மயங்க வைத்​து, தங்​கச் சங்​கி​லியை அந்​தப் பெண் திருடிச் சென்​றது அவருக்​குத் தெரிய​வந்​தது. இதுகுறித்​து, தேனாம்​பேட்டை காவல் நிலை​யத்​தில் மணி புகார் தெரி​வித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசாரித்தனர்.

இதில், தப்பி ஓடியது குன்​றத்​தூர் சிவன்​தாங்​கல் பகு​தி​யில் வசித்​து​வரும் தீபிகா என்ற தீபலட்​சுமி (22) என்​பது தெரிய​வந்​தது. இவர், தனது கூட்​டாளி​யான மேற்​கு ​மாம்​பலத்​தைச் சேர்ந்த சதிஷ்கு​மார்​(23) என்​பவருடன் சேர்ந்​து, பல தொழில் அதிபர்​களிடம் இதே​ பாணி​யில் திருடியது தெரிய வந்​தது. இதையடுத்​து, தலைமறை​வாக இருந்த இரு​வரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர்.

திருட்டு நகையை விற்​று, அதன்​மூலம் கிடைத்த பணத்​தில் இருசக்கர வாக​னம் வாங்​கி​யுள்​ளனர். வாக​னத்​தை​யும், ரூ.3.14 லட்​சம் பணத்​தை​யும் போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர். பின்​னர், அவர்​களை நீதி​மன்​றக் காவலில்​ புழல்​ சிறையில் அடைத்தனர்.

spot_imgspot_img

More like this
Related

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த...

நாளையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம்

வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த மின்சாரத் தேவை மற்றும் அதிக சூரிய மின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்