கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் செயலிழந்த மின் தூக்கி: நோயாளர்களை ஏற்றி இறக்கும் பணிகளில் மாணவர்களும்

Date:

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த ஒரு வாரமாக பயன்பாட்டில் இருந்த ஒரேயொரு மின் தூக்கி செயலிழந்த நிலையில் வைத்தியசாலையின் செயற்பாடுகள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகள் உட்பட சத்திர சிகிச்சை கூடம் என பெரும்பாலான நடவடிக்கைகள் முதலாவது மாடியில் காணப்படுவதனால் நோயாளர்கள் படிக்கட்டு வழியாக ஏற்றி இறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட நோயாளர்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

அத்தோடு வைத்தியசாலை பணியாளர்களும் நோயாளர்களை ஏற்றி இறக்கும் பணிகளால் நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். இதனால் இந்த நிலைமையை சமாளிப்பதற்காக நோயாளர்களை விடுதிகள் மற்றும் சத்திரசிகிச்சை கூடங்களுக்கு கொண்டு செல்லுதல் படிக்கட்டுகளின் வழியே ஏற்றி இறக்கும் பணிகளில் மாணவர்களையும் ஈடுபடுத்தியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கட்டாயம் பிரசுரித்து தரவும். நன்றி : அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா கல்வியாளர்களையும் சாதனை மாணவர்களையும் கௌரவித்த ‘PEARLS – SEASON 07’

அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வியாளர்களை...

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நகைகள் இல்லாமல் வந்த கொண்ட ரஞ்சி

ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட, பிரபல...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நிறைவு

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்