கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் மின் தூக்கி இயங்கவில்லை

Date:

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பயன்பாட்டில் இருந்து வந்த மின் தூக்கி கடந்த நான்கு நாட்களாக செயலிழந்த நிலையில் நோயாளர்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

சத்திர சிசிக்சை கூடம், அவசர சிகிச்சை, உள்ளிட்டவற்றுக்கு நோயாளிகளை அழைத்துச் செல்வது, சிகிச்சை நிறைவுற்றதும் விடுதிகளுக்கு மீளவும் அழைத்து வருவது போன்றவற்றுக்கு பயன்படுத்தப்பட்ட மின் தூக்கியே செயலிழந்துள்ளது.

இதனால் ஊழியர்களை நோயாளிகளை படிகட்டு வழியாக சுமந்து செல்வதும் சிகிச்சை நிறைவுற்றதும் அங்கிருந்து மீளவும் சுமந்து செல்வதும் என ஊழியர்களும் நெருக்கடிகளை சந்தித்துள்ளனர்.

அத்தோடு ஆபத்தான சத்திர சிகிச்சை மேற்கொண்ட நோயாளிகள், மற்றும் நடமாட முடியாத நோயாளிகள் என பலரும் இதனால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மாவட்ட வைத்தியசாலையில் ஒரேயொரு மின்தூக்கியே பயன்பாட்டில் இருப்பது
பலரிடமும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைத்தியசாலையுடன் தொடர்பு கொண்டு வினவிய போது திருத்தும் பணிகள் மேற்கொள்வதாக குறிப்பிட்டனர்.

-மு.தமிழ்ச்செல்வன்-

spot_imgspot_img

More like this
Related

யாழில் காரை சிதைத்த டிப்பர்

யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி பகுதியில் இன்று காலை டிப்பர் வாகனமும் காரும்...

ஹூதிகளுக்கு ஆதரவளிப்பதை ஈரான் நிறுத்த வேண்டும்: ஜி7 வெளியுறவு அமைச்சர்கள்

யேமனில் உள்ள ஹூதிகளுக்கு ஈரான் ஆயுதம் வழங்குவதையும் ஆதரவளிப்பதையும் நிறுத்த வேண்டும்...

முன்னாள் அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் கைது!

8.1 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஊவா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்