பாகிஸ்தானில் குடும்பத்தினரின் விருப்பத்தை மீறி காதல் திருமணம் செய்த தம்பதி ஆணவக் கொலை

Date:

பாகிஸ்தானில் குடும்பத்தினரின் விருப்பத்தை மீறி காதல் திருமணம் செய்த தம்பதியை ஆணவக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த இளம் ஜோடி தங்களது வீட்டாரின் எதிர்ப்புகளை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். இதுதொடர்பாக அந்த பெண்ணின் சகோதரர் பழங்குடியினத் தலைவரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் அந்த காதல் ஜோடி ஆணவக்கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக அந்த ஜோடியை டிரக்கில் குவெட்டாவின் பாலைவனப் பகுதிக்கு தூக்கிச் சென்ற ஒரு கும்பல் கொடூரமாக சுட்டுக் கொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக 14 பேரை போலீஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். இதில், ஆணவக்கொலைக்கு உத்தரவிட்ட உள்ளூர் பழங்குடியினத் தலைவர் ஷேர் பாஸ் சதசாயும் அடங்குவார்.

பலுசிஸ்தான் முதல்வர் சர்ப்ராஸ் புக்தி கூறுகையில், “ஒருவரை சுட்டுக்கொன்று அதனை வீடியோவில் பதிவு செய்வது மனிதத் தன்மையற்ற செயல். ஒரு உயிரை எடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. இது, ஒரு வேதனையான, அருவருப்பான நிகழ்வு. இது ஒரு கொலைக் குற்றம். சம்பந்தப்பட்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்படுவதை அரசு உறுதி செய்யும்” என்றார்.

spot_imgspot_img

More like this
Related

கைத்தொலைபேசி ஊடாக நுணுக்கமாக ஐஸ் போதைப்பொருள் வியாபாரம்- சந்தேகநபர் கைது

சாய்ந்தமருது மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்டகாலமாகக் கைத்தொலைபேசி ஊடாகக் குறுஞ்செய்திகளை அனுப்பி...

திரையரங்கில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மீட்பு

கிரிந்திவெலவில் உள்ள ஒரு திரையரங்கிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல துப்பாக்கிகள், ஆயிரக்கணக்கான...

‘தேனிசை தென்றல்’ தேவா மிகவும் நல்லவர்! – தலைவர்கள் இரங்கல்

தேவாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசு துணைத் தலைவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்