வட்டுக்கோட்டையில் குழு மோதல்: பொலிசார் துப்பாக்கிச்சூடு!

Date:

வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை இரண்டு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

தனி நபர்களுடைய நேற்று முன்தினம் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இந்த பிரச்சினையானது பொலிஸ் நிலையம் வரை சென்ற பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு தரப்பும் மோதிக்கொண்டனர்.

இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் மற்றுமொரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டுக்கோட்டை பொலிஸார் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

அத்துடன் வன்முறையில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்!

மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின்...

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்