சரோஜாதேவியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்: இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Date:

மறைந்த நடிகை சரோஜாதேவியின் (87) உடல் சொந்த ஊரில் நேற்று அரசு மரி​யாதை​யுடன் நல்லடக்​கம் செய்​யப்​பட்​டது.

தமிழ், கன்​னடம், தெலுங்​கு, இந்தி உள்​ளிட்ட மொழிகளில் 200-க்​கும் மேற்​பட்ட திரைப்​படங்​களில் நடித்து ரசிகர்​களை கவர்ந்த நடிகை சரோஜாதேவி, பெங்​களூரு​வில் நேற்று முன்​தினம் கால​மா​னார்.

அவரது உடலுக்கு கர்​நாடகமுதல்​வர் சித்​த​ராமை​யா, துணைமுதல்​வர் டி.கே.சிவகு​மார், கன்னட முன்​னணி நடிகர்​கள் சிவ​ராஜ்
குமார், உபேந்​தி​ரா, கன்னட கூட்​டமைப்​பின் தலை​வர் வாட்​டாள் நாக​ராஜ் உள்​ளிட்​டோர் மலர் வளை​யம் வைத்து அஞ்​சலி செலுத்தினர். பெங்​களூரு எம்ஜிஆர் மன்ற தலைவர் சி.எஸ்.குமார் தலைமையில் ஏராள​மான ரசிகர்​களும், ஆயிரக்​கணக்​கான கன்னட ரசிகர்​களும் அவரது உடலுக்கு மாலை அணி​வித்து அஞ்​சலி செலுத்​தினர்.

இதையடுத்து சரோஜாதேவி​யின் உடல் அவரது சொந்த ஊரான சென்​னபட்​ணாவை அடுத்​துள்ள தஷாவ​ரா​வுக்கு வாக​னத்​தில் ஊர்​வல​மாக கொண்டு செல்​லப்​பட்​டது. வழிநெடுக அவரது ரசிகர்​களும் கிராம மக்​களும் மலர்​தூவி அஞ்​சலி செலுத்​தினர். பின்​னர் சரோஜாதேவி​யின் உடல் தஷாவரா கிராமத்​தில் உள்ள கொடிஹள்ளி தோட்​டத்​துக்கு கொண்டு செல்​லப்​பட்​டது.

சரோஜாதேவி​யின் குடும்​பத்​தினர் ஒக்​கலிக சமூக சம்​பிர​தாயப்​படி இறுதி சடங்​கு​களை மேற்​கொண்​டனர். பின்​னர் துணை முதல்​வர் டி.கே.சிவகு​மார் அரசு சார்​பில் மலர்​வளை​யம் வைத்து வணங்​கி​னார். இதையடுத்து முழு அரசு மரி​யாதை​யுடன், போலீ​ஸாரின் அணிவகுப்​புடன் துப்​பாக்கி குண்​டு​கள் முழங்க சரோஜாதேவி​யின் உடல் நல்​லடக்​கம் செய்​யப்​பட்​டது. பின்​னர் இறுதி ஊர்​வலத்​தில் பங்​கேற்ற ஆயிரக்​கணக்​கான ரசிகர்​கள் அவர் புதைக்​கப்​பட்ட இடத்​தில்​ மலர்​களை தூவி அஞ்​சலி செலுத்​தினர்​.

spot_imgspot_img

More like this
Related

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...

ராஜபக்சக்களின் வழியிலேயே அநுரவும்

ராஜபக்சாக்கள் தமிழர்கள் விடயத்தில் எதைச் செய்தார்களே அதையே அநுர அசாங்கமும் தமிழர்களுக்குச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்