தமிழில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகும் வேடன்!

Date:

விஜய் மில்டன் இயக்க உள்ள புதிய படத்துக்கு பிரபல ராப் பாடகர் வேடன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மலையாளத்தில் பிரபல ராப் பாடகராக பிரபலமாக இருப்பவர் வேடன். இவருக்கு கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் காலகட்டத்தில் ‘வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்’ என்ற தனது முதல் இசை ஆல்பத்தை யூடியூபில் வெளியிட்டு புகழ் பெற்றார். இந்தப் பாடல் தீயாய் பரவி அவரை பிரபலமாக்கியது. சாதி, மத அடக்குமுறைகளுக்கு எதிராக இப்பாடலில் இடம்பெற்ற வரிகள் சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘குத்தந்திரம்’ என்ற பாடலை பாடினார். அண்மையில் வெளியான ‘நரிவேட்டா’ படத்தில் இவர் பாடிய ’வாடா வேடா’ பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ‘கோலிசோடா’படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் புதிய படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் வேடன். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்துக்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. விரைவில் இப்படத்தின் நடிகர்கள், மற்ற தொழில்நுட்ப குழுவினர் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் இறக்குமதி செலவு குறைகிறது!

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உச்சத்தை எட்டிய எரிபொருள் இறக்குமதி செலவுகள்...

கனடா ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்ட இளம் பிசியோதெரப்பிஸ்ட்: ஐ.டி இளைஞனின் அதிர வைக்கும் காதல் குற்றங்கள்!

தெல்தெனிய மாவட்ட மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் ஒரு காரில் மீட்கப்பட்ட சடலம...

டொரொண்டோ பேருந்தில் ஹிஜாப் அணிந்த பெண்ணை தாக்கியதாக குற்றச்சாட்டு: தமிழ் இளைஞர் கைது

கனடாவின் டொரொண்டோ நகரில், ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்ணை இன மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்