ஒட்டுகேட்பு கருவி பொருத்திய விவகாரம்: தனியார் நிறுவன ஆய்வறிக்கை அடிப்படையில் நடவடிக்கை – ராமதாஸ் தகவல்

Date:

வீட்​டில் ஒட்​டு​கேட்பு கருவி பொருத்​தப்​பட்ட விவ​காரத்​தில், தனி​யார் நிறுவன ஆய்​வுக்​குப் பின்​னர், உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார்.

கடலூர் மாவட்​டம் விருத்​தாசலத்​தில் நேற்று முன்​தினம் செய்​தி​யாளர்​களிடம் பேசிய நிறு​வனர் ராம​தாஸ், “தைலாபுரத்​தில் எனது வீட்​டில் எனது நாற்​காலிக்கு அருகே அதிநவீன ஒட்​டு​கேட்​புக் கருவி பொருத்​தப்​பட்​டுள்​ளது. லண்​டனில் இருந்து வாங்​கப்​பட்ட, விலை மதிப்​புமிக்க இக்​கரு​வியை 2 நாட்​களுக்கு முன்​பு​தான் கண்​டு​பிடித்​தோம். யார் வைத்​தது, எதற்​காக வைத்​தார்​கள் என ஆய்வு நடை​பெறுகிறது” என்​றார்.

இந்​நிலை​யில், திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் உள்ள ராம​தாஸ் இல்​லத்​தில், ஒட்​டு​கேட்பு கரு​வியை ஆய்வு செய்​தவற்​காக தனி​யார் நிறு​வனத்​தைச் சேர்ந்த 5 துப்​பறி​யும் நிபுணர்​கள் நேற்று வந்​தனர். இக்​குழு​வினர் 3 மணி நேரம் ஒட்​டு​கேட்பு கரு​வியை ஆய்வு செய்​தனர்.

பின்​னர் ராம​தாஸ் கூறும்​போது, “என்னை சந்​திக்க பாட்​டாளி சொந்​தங்​கள் வந்து கொண்டே இருக்​கிறார்​கள். இதனால் நான் கூடு​தல் மகிழ்ச்​சி​யுடன் இருக்​கிறேன். எனது வீட்​டில் வைக்​கப்​பட்ட ஒட்​டு​கேட்​புக் கரு​வியை தனி​யார் நிறுவன துப்​பறி​யும் குழு​வினர் ஆய்வு செய்து வரு​கின்​றனர். அவர்​கள் அளிக்​கும் ஆய்வு அறிக்​கை​யின் அடிப்​படை​யில் அடுத்​தகட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும். தைலாபுரத்​துக்கு வந்து தாயை மகன் (அன்​புமணி) சந்​தித்​துள்​ளார். பாமக பொதுக்​குழு கூட்​டத்தை கூட்​டு​வதற்​கான காலம் இன்​னும்​ வரவில்​லை” என்​றார்​.

சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள்: பாமக செய்​தித் தொடர்​பாளர் வழக்​கறிஞர் கே.​பாலு நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், “மூத்த அரசி​யல் தலை​வ​ரான ராம​தாஸ் வீட்​டில் ஒட்​டுக்​கேட்பு கருவி பொருத்​தப்​பட்​டது உண்​மையெனில், அது கண்​டிக்​கத்​தக்​கது. இதன் பின்​னணி​யில் இருப்​பவர்​கள் யார், நோக்​கம் என்ன என்ற விவரங்​களை மக்​களுக்கு தெரிவிக்க வேண்​டியது அரசின் கடமை.

எனவே, சைபர் பாது​காப்பு வல்​லுநர்​களை உள்​ளடக்​கிய உயர்​நிலைக் குழுவை அமைத்து விசா​ரித்​து, பின்​னணி​யில் உள்​ளவர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்று தெரி​வித்​துள்​ளார்​.

spot_imgspot_img

More like this
Related

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...

வதந்திகளையும், பொய்களையும் மட்டும் பேசிய விஜய்!

“சட்டம் - ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்