இன்றைய வானிலை

Date:

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (13) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன், தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு என வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் கொள்ளையர்கள் கொடுத்த மயக்க மருந்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட வயோதிப பெண் 8 மாதத்தின் பின்னர் உயிரிழப்பு —

மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து  தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு வந்த கணவன்...

ஏறாவூரில் பொது சுகாதார பரிசோதகரை பழிவாங்க அவரின் மோட்டார் சைக்கிளில் ஜஸ் போதைப் பொருளை மறைத்து வைத்த இருவர் கைது

ஏறாவூரில்   உணவக உரிமையாளர் ஒருவர் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை பழிவாங்க வேண்டி...

ஏறாவூர் தன்னமுனையில் நபர் ஒருவரை கடத்தி சென்று சிறை வைத்த 36 வயதுடையவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை–

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பகுதியைச் சேர்ந்த சதீஸ்குமார் என்பவரை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்