உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் துணை ஆணையாளர் ஒருவர், தொழிலதிபர் ஒருவரிடமிருந்து ரூ.50,000 இலஞ்சம் கேட்டதற்காக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு ஜாவத்த வீதியில் உள்ள இறைவரித் திணைக்களத்தின் அலுவலகத்தில் இலஞ்சம் பெற்றபோது அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தெமட்டகொடவில் உள்ள தனது வணிகத்திற்கான வரி அனுமதி அறிக்கையை வழங்குவதற்காக பிலியந்தலையில் உள்ள ஒரு தொழிலதிபரிடம் இறைவரித் திணைக்களத்தின் அதிகாரி இலஞ்சம் கேட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கூறுகிறது.
இறைவரித் திணைக்களத்தின் அதிகாரி ரூ.100,000 லஞ்சம் கேட்டிருந்தார்., ஆனால் தொழிலதிபர் அதை ரூ.50,000 ஆகக் குறைத்திருந்தார்., அதன் பிறகு ஜூலை 3 ஆம் திகதி அந்த அதிகாரிக்கு ரூ.42,000 முதற்கட்டமாக வழங்கப்பட்டது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள், மீதமுள்ள ரூ.8000 ஐ இன்று ரொக்கமாகப் பெற்றபோது, அதிகாரியைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இறைவரித் திணைக்களத்தின் துணை ஆணையாளர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.




