செம்மணி போராட்டக்களத்துக்கு வந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்!

Date:

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார்.

உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் மாலை வந்திறங்கிய ஆணையாளர் , முன்னதாககோவில் வீதியில் அமைந்துள்ள IOM அலுவகத்திற்கு சென்றிருந்தார்.

அதனை தொடர்ந்து செம்மணி புதைகுழி காணப்படும் சிந்துபாத்தி இந்து மயானத்திற்கு சென்று புதைகுழிகளை நேரில் பார்வையிட்டார்.

அதன் போது, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் போது, களத்தில் நின்ற சட்டத்தரணிகள் , மனித புதைகுழி அப்பகுதியில் காணப்படுவதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தவர்கள் உள்ளிட்ட தரப்பினர்களிடம் புதைகுழிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

அதனை தொடர்ந்து செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழ் . வளைவுக்கு அருகில் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் ” அணையா விளக்கு” போராட்ட களத்திற்கு நேரில் சென்று , அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஏற்றப்பட்ட ” அணையா தீபத்திற்கு முன்பாக மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். nr

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலையில் நிவாரணம்? உலக எண்ணெய் விலை சரிவால் அரசின் முக்கிய அறிவிப்பு

உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: விரைவில் எரிபொருள் விலை நிவாரணம்...

மட்டக்களப்பில் ,இந்த வருடத்தில் டெங்கு நோயால் முதன் முதலாக இளம் தாய் உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய வாழைச்சேனையை சேர்ந்த...

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்