யாழில் வாள்வெட்டு சந்தேகநபர்கள் கைது!

Date:

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறைச் சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையின்போது மூன்று கூரிய வாள்களும் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டது.

உதயபுரம் பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு சகோதரர்கள் மீது இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளின்போது கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அரியாலை நாயான்மார்கட்டை சேர்ந்த 25,28,30 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...

மஹிந்த கூட்டத்தை புகழ்ந்து பாடிய பைத்தியத்தை தெளிய வைப்போம்

யாழ்ப்பாணத்தில்; இருந்து சென்ற ஒரு பைத்தியம் முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்