கிளிநொச்சியில் இசை நிகழ்வு

Date:

கிளிநொச்சியில் தென்னிந்திய பிரபல பாடகர்கள் கலந்துகொள்ளவுள்ள மாபெரும் இசைக் கொண்டாட்டம் நாளை (ஜூன் 21) மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் பிரபாலினி பிரபாகரனின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் “வன்னியின் இசைத் தென்றல்” இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ஈழத்தின் புகழ்பெற்ற சாந்தன் இசைக் குழுவின் இசையமைப்பில், தென்னிந்திய பிரபல பாடகர்களான சத்தியன், திவாகர், பத்மலதா ஆகியோர் பாடல்களைப் பாடவுள்ளனர்.

அவர்களுடன் ஈழத்தின் புகழ்பெற்ற பாடகர் கோகுலன் உள்ளிட்டவர்களும் பாடல்களைப் பாடி இரசிகர்களை மகிழ்விக்கவுள்ளனர்.

இந்த இசை நிகழ்ச்சி தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், போரினால் பாதிக்கப்பட்ட மக்களை உற்சாகப்படுத்தி, இசையின் மூலம் அவர்களை மகிழ்விக்கும் நோக்கில் இந்த இசை நிகழ்ச்சி இலவசமாக நடத்தப்படுவதாகவும், இசைக் கலைஞர்களைக் கௌரவிக்கவுள்ளதாகவும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் பிரபாலினி பிரபாகரன் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி புதைகுழி விவகாரம்: ராஜ் சோமதேவவின் விளக்கங்கள் குறித்து சுயாதீன ஆய்வு கோரும் அமெரிக்கத் தமிழர் அமைப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பாகப் பேராசிரியர் ராஜ் சோமதேவ முன்வைத்துள்ள...

மட்டக்களப்பில் பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து நவம்பர் 10 திகதி வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்