வலி மேற்கில் தமிழரசு தவிசாளர்!

Date:

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பாபு தேவ நந்தினி தலைமையில் இன்று இடம்பெற்றது.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் 4 பேரும் ஈபிடிபியின் சார்பில் 2பேரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் 2 பேரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 6 பேரும் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் 1 வரும் சுயேச்சை குழுவின் சார்பில் ஒருவருமாக 26 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

சண்முகநாதன் ஜெயந்தனின் பெயர் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் முன்மொழியப்பட்டது இதேவேளை தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினர் சுப்பிரமணியம் தரமலிங்கம் நந்தகுமார் என்பவரது பெயர் முன்மொழியப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து பகிரங்க வாக்கெடுப்பு நடாத்துவதா அல்லது இரகசிய வாக்கெடுப்பு நடாத்துவதா என வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதன் பொழுது பகிரங்க வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 18 நாக்குகளும் இரகசிய வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 8 பேரும் ஆதரவு வழங்கினர்.

இதன் பொழுது பகிரங்க வாக்கெடுப்பில் சண்முகநாதன் ஜெயந்தனுக்கு ஆதரவாக 15 வாக்குகளும் நந்தகுமாருக்கு ஆதரவாக 7 வாக்குகளும் பெற்ற நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் சண்முகநாதன் ஜெயந்தன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

தொடர்ச்சியாக சங்கு தமிழ் தேசிய பேரவையின் சார்பில் உபதவிசாளராக வேலையா சச்சிதானந்தனும் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் கந்தையா இலங்கேஸ்வரனின் பெயர் முன்மொழியப்பட்டது. இந்நிலையில் கந்தையா இலங்கேஸ்வரன் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவின் உளறு வாய்க்கு பெரும் ஆப்பு: நிகழ்நிலை காப்பு சட்டத்தில் வழக்கு!

தெல்லிப்பளை வைத்தியசாலை புற்றுநோய் பிரிவு வைத்தியர் ஒருவருக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில்...

ஈரானின் எஃகு ஆலைகள் இரண்டு செயலிழந்தன

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களின் தொடர்ச்சியான அலைகளால் ஈரானின் இரண்டு மிகப்பெரிய...

சட்டத்தரணியின் அடிப்படை உரிமைகளை மீறியதால் ரூ.60,000 இழப்பீடு வழங்க பொலிஸ் பேச்சாளருக்கு நீதிமன்றம் உத்தரவு!

2017 ஆம் ஆண்டு நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்