வலி தெற்கு பிரதேசசபை தமிழரசு கட்சி வசம்!

Date:

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தியாகராஜா பிரகாஷ் தெரிவானார்.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று வலிகாமம் தெற்கு பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

31 உறுப்பினர்களை கொண்ட வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தலா 6 ஆசனங்களையும்
தேசிய மக்கள் சக்தி 5 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.

தவிசாளர் பதவிக்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில்
போட்டியிட்ட தியாகராஜா பிரகாஷ் 14 வாக்குகளையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கருணை நாதன் அபராசுதன் 12 வாக்குகளையும் பெற்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் ஐந்து உறுப்பினர்களும் வாக்களிப்பின் போது நடுநிலை வகித்தனர்.

உப தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட செல்வரத்தினம் உதயகுமாரன் தெரிவானார்.

spot_imgspot_img

More like this
Related

மாளிகைக்காடு மையவாடி விவகாரம்: பள்ளிவாசல் தலைமைகள், பொது அமைப்பினர் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கலந்துரையாடல்

மாளிகைக்காடு மையவாடி தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும்...

22 வது அரசியலமைப்புத் திருத்தம்: தேசிய நலன், ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி

இலங்கை அரசினால் முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் அவசரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்