ஏறாவூர் நகரசபை மு.கா வசம்

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகர சபைக்கான தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்யும் வகையிலான அமர்வு இன்று(16) காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்றது.

17 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை கொண்ட ஏறாவூர் நகர சபையில் தவிசாளர், உப தவிசாளர் தெரிவுக்கான இன்றைய அமர்வில் 16 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கலந்து கொள்ளவில்லை.

இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஏறாவூர் அமைப்பாளர் ஒருங்கிணைப்பு செயலாளர் முன்னைய நாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நழீம் முன்மொழிந்து வழிமொழியபட்டார்.

அதனைப் போன்று ஐக்கிய தேசிய கட்சி சார்பில் பர்லின் அவர்கள் முன்மொழித்து வழிமொழியப்பட்டார்.

இதன் பிரகாரம் தவிசாளர் தெரிவு தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டது.

இதன்போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட எம்.எஸ். நழீம் அவர்களுக்கு ஆதரவாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 07 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த 01 உறுப்பினர்களும், தமிழரசுக் கட்சியை சேர்ந்த 01 உறுப்பினர் என மொத்தமாக 09 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த எம். எஸ். சமீம் (பர்லின்) அவர்களுக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 04 உறுப்பினர்களும், தமிம் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை சேர்ந்த 02 உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 01 உறுப்பினரும் 07 உறுப்பினர் வாக்களித்தர்

இதன் பிரகாரம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த MSM.நழீம் அவர்கள் 02 மேலதிக வாக்குகளால் வெற்றியீட்டினார்.

spot_imgspot_img

More like this
Related

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல்...

மாளிகைக்காடு மையவாடி விவகாரம்: பள்ளிவாசல் தலைமைகள், பொது அமைப்பினர் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கலந்துரையாடல்

மாளிகைக்காடு மையவாடி தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்