தமிழரசு- ஈ.பி.டி.பி கூட்டணியை கடுமையாக விமர்சித்த அமைச்சர் சந்திரசேகரன்!

Date:

தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கப்பட்ட – துரோகியென முத்திரைக்குத்தப்பட்ட தரப்புடன், அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும். அப்படியான அரசியலை முன்னெடுக்கும் தரப்பின் முகத்திரை தற்போது கிழிந்துவிட்டது – என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழ். சாவக்கச்சேரியில் இன்று (14.06.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘நாடு தழுவிய ரீதியில் உள்ளுராட்சி சபைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. வடக்கிலும் இதற்குரிய நடவடிக்கை இடம்பெறுகின்றது. தெற்கில் கடைபிடித்த அணுகுமுறையை இதுவிடயத்தில் நாம் வடகிழக்கில் கடைபிடிக்கவில்லை. இங்கு நடுநிலை வகித்தோம்.

நாம் வாக்கெடுப்பில் பங்கேற்றிருந்தால் இங்குள்ள தமிழ்க் கட்சிகளின் கனவு சிதைக்கப்படும். மனக்கோட்டை, மண்கோட்டையாக மாறிவிடும் என்பதை சொல்லி வைக்க விரும்புகின்றோம்.

இங்கு யார் ஆட்சி செய்தாலும் அந்த ஆட்சிக்கு நாம் உதவியாக இருப்போம். ஏனெனில் மக்களுக்கு சேவை செய்வதே எமது முதன்மை நோக்கமாகும். உள்ளுராட்சி சபைகள் ஊடாக மக்களுக்கு கிடைக்கப்பெறும் சேவைகள் சரியாக சென்றடைய வேண்டும். அதற்காக எமது உறுப்பினர்கள் தீவிரமாக செயற்படுவார்கள்.

அதேபோல ஊழல், மோசடிகள் இடம்பெறும் பட்சத்தில் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கும் எமது உறுப்பினர்கள் செயற்படுவார்கள். மக்களை ஏமாற்றும் அரசியலை நாம் முன்னெடுக்கவில்லை. சாக்கடை அரசியல் செய்யவும் தயாரில்லை. அவ்வாறு செய்ய நினைத்திருந்தால் யாழ். மாநகரில் இன்று வேறொரு நபரே மேயராக வந்திருக்கக்கூடும்.

கடந்த காலங்கள் முழுவதும் தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்ட – துரோகிகள் என முத்திரை குத்தப்பட்ட – ராஜபக்சக்களின் காலை நக்கி பிழைக்கின்றவர் எனக் கூறப்பட்ட – மக்களுக்கு எதிராக அராஜாங்களை கட்டவிழ்த்துவிட்டவர் – ஊடகவியலாளர்களைக் கொன்றவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் கூட்டு சேரும் நிலைமை காணப்படுகின்றது. இதனை மக்களும் இன்று புரிந்துகொண்டுள்ளனர்.

மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக அல்ல, தமது காவாலித்தனமான அரசியலை தக்கவைத்துக்கொள்வதற்காகவே இவர்கள் இவ்வாறு ஆட்சியமைக்கின்றனர்.

இப்படியானவர்கள்தான் தேசிய மக்கள் சக்தியை இனவாதகக் கட்சியெனவும், வாக்களிக்க வேண்டாம் எனவும் பிரச்சாரம் செய்தனர். ஆனால் அவர்கள் யாரென்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

அதேபோல தெற்கிலும் கூட்டுக்களவாணிகள் கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்கின்றனர். கடந்த காலங்களில் ஒருவரையொருவர் எப்படி விமர்சித்துக்கொண்டனர். ஆனால் வெட்கம் இல்லாமல் – அதிகாரத்துக்காக – கொள்கை துறந்து கூட்டு சேர்கின்றனர். ” – என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நேட்டோவிலிருந்து விலகுவதை பரிசீலிக்கும் ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் ஆதரவளிக்கத்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி இவர்தான்: தனி விசாரணை நடத்தி கண்டுபிடித்த கோட்டாவின் கூட்டாளி!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி சஹாரன் ஹாஷிம் தான் என்று சட்டத்தரணி உதய...

‘என் குழந்தைக்கு தந்தை இவர்தான்’: இலங்கை கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்ன மீது விமானப்பணிப்பெண் தொடர்ந்த வழக்கு!

கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்னவை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவதா இல்லையா என்பதைத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்