செம்மணி அகழ்வில் இதுவரை 7 மனித மண்டையோடுகள், எச்சங்கள் மீட்பு!

Date:

அரியாலை – செம்மணி சித்துபாத்தி மயானத்தில் எழு மனித மண்டையோடு உள்ளிட்ட எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி – சித்துபாத்தி மயானத்தில், கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் இருந்து மனித என்புச் சிதிலங்கள் அவதானிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் நீதவான் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். இதன்போது, மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஸ்கான் ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு இரண்டு எலும்புக்கூட்டு பாகங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது.

குறித்த அகழ்வு பணிகள் நேற்று மீண்டும் ஆரம்பமான நிலையில் குறித்த பகுதியில் மேலும் ஐந்து மனித உடலங்களின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் தொடர்ந்து வரும் நாட்களில் அகழ்வு பணிகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மூன்று மனித மண்டையோடுகளுக்கு மேல் ஒரு பகுதியில் அடையாளம் காணப்பட்டால் மனிதப் புதைகுழி என அதனை பிரகடனப்படுத்த முடியும் என்ற நிபந்தனைக்கமைய குறித்த பகுதியை மனிதப் புதைகுழியாக பிரகடனப்படுத்துமாறு கோரி யாழ்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவானிடம் விண்ணப்பத்தை முன் வைக்க சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்