நீதிபதிக்கு பாலியல் மிரட்டல் குறுஞ்செய்தி அனுப்பிய சட்டத்தரணி கைது!

Date:

மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மிரட்டல் விடுத்து மெசஞ்சர் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிய சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் சிலாபம் பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, கடந்த 2022 ஆம் ஆண்டில், சம்பந்தப்பட்ட சட்டத்தரணி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மிரட்டும் வகையில் மெசஞ்சர் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பியதாக முறைப்பாடு அளித்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இது தொடர்பான விடயங்களை சட்டமா அதிபருக்கு அளித்துள்ளனர்.

சந்தேகநபர் செய்த நடவடிக்கைகள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் கீழ் வருவதாகவும், அவருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சந்தேக நபரைக் கைது செய்துள்ளதோடு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

spot_imgspot_img

More like this
Related

யாழ் ஊர்காவற்றுறை வீதியில் விபத்து !

யாழ்ப்பாணம் -  ஊர்காவற்றுறை பிரதான வீதியில் வேகமாகச் சென்ற கார் ஒன்று...

யாழில். விசேட தேவையுடைய 76 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி

ஜனாதிபதி நிதியத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான காசோலை வழங்கும்...

நாடாளுமன்ற உறுப்பினர் பி ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ஈரோஸ் கட்சி தலைவர் இரா. பிரபாகரன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு–

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா கடந்த காலத்தில் ஓட்டமாவடி காளி கோவிலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்