உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவுவது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன இன்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளன.
இரண்டு கட்சிகளும் வெளியிட்ட கூட்டறிக்கையின்படி, இந்த விடயம் தொடர்பான கொள்கைகள் குறித்து சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.
மற்ற எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவுவதற்கு பொதுவான ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்ட இந் கூட்டம், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.




