வவுனியாவில் சிக்கிய மோட்டார் சைக்கிள் திருடன்

Date:

வவுனியா, மதவாச்சி பகுதிகளில் 5 மோட்டார் சைக்கிள்களை திருடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிசார் தெரிவித்தனர்.

இம்மாதம் வவுனியா, ஈரப்பெரியகுளம், செட்டிகுளம், முதலாம் குறுக்குத் தெரு, மதவாச்சி – அட்டவீரக் கொட, மதவாச்சி ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன.

குறித்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது சிதம்பரபுரம் வீதி, ஈரப்பெரியகுளம் பகுதியில் வசிக்கும் 27 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த 5 மோட்டார் சைக்கிள்களும் முறையே 550,000, 299,500, 500,000, 300,000, 970,000 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டிருந்தமை தெரியவந்தது.

இதனையடுத்து குறித்த 5 மோட்டார் சைக்கிள்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட இளைஞரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் குண்டுத் தாக்குதலுக்கு திட்டமிட்டவர் கைது!

கொழும்புப் பகுதியில் குண்டுகளை வெடிக்கச் செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்...

யாழ் வைத்தியசாலை சம்பவம்: பின்னணியும், சந்தேகங்களும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் முறையற்ற விதமாக நடந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரின்...

பேச்சுவார்த்தைக்கு ஈரான் குழு செல்லும்

பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) இஸ்லாமாபாத்திற்கு ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்