செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் அகழ்வு பணி ஆரம்பம்

Date:

அரியாலை – செம்மணி சிந்துபாத்தி மாயானத்தில், மனித எலும்பு எச்சங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் இருந்து மனித என்புச் சிதிலங்கள் அவதானிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி சம்பவ இடத்தில் நீதவான் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

இதன்போது, மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஸ்கான் ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் அங்கு அகழ்வாய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் இன்றைய அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு, எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டன, தொடர்ந்து வரும் நாட்களில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழ். இணுவில் சந்தியில் கோர விபத்து! துவிச்சக்கர வண்டியில் சென்ற 67 வயதுடையவர் பலி

யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் சம்பவ...

நெல் வயலில் விழுந்து உயிருக்குப் போராடும் 15 வயது காட்டு யானை

கிழக்கு வனவிலங்கு மண்டலம்  அம்பாறை வனவிலங்கு அலுவலகத்தின் கீழ் உள்ள வளத்தாப்பிட்டி...

உணவக உரிமையாளர் மரண வழக்கு: மாடல் ஷ்ரத்தா உள்ளிட்ட 3 பேர் கைது

உத்தர பிரதேச மாநிலம் லக்​னோ​வில் உணவக உரிமையாளர் சிவா சர்மா (28)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்