வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க விரும்பும் எம்.ஏ.சுமந்திரன்!

Date:

எதிர்வரும் வட மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதில் ஆர்வமுள்ளதை எம்.ஏ.சுமந்திரன் மீளவும் வெளிப்படுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் (10) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உள்ளூராட்சிசபைகளில் ஆட்சியமைப்பது பற்றி நடந்த கலந்துரையாடலில் இதனை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், கந்தரோடையிலுள்ள த.சித்தார்த்தனின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இதில் த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், மு.சந்திரகுமார் ஆகியோருடன், எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்றிருந்தார்.

இதன்போது, எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் வடமாகாணத்தில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க விருப்பமுள்ளதை எம்.ஏ.சுமந்திரன் வெளிப்படுத்தினார்.

சி.சிறிதரன் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கா விட்டால், தான் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவேன் என குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த சில மாதங்களாக தனிப்பட்ட கலந்துரையாடல்களில் இதே விதமான கருத்தை எம்.ஏ.சுமந்திரன் வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

க.வி.விக்னேஸ்வரன் போல, அரசியலில் பரிச்சயமற்றவர்களை வெறும் மக்கள் கவர்ச்சிக்காக முதலமைச்சர் வேட்பாளராக  களமிறக்குவதை விட, எம்.ஏ.சுமந்திரன் பொருத்தமான முதலமைச்சராக இருப்பார் என்பதே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலானவர்களின் அப்பிராயமாக உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகுச் சேவைக்கான நிதியுதவி இந்தியா மீண்டும் நீட்டித்துள்ளது

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய...

வீடு மாறி குண்டடித்த இருவரும் கைது!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் கைக்குண்டு வீசப்பட்டதில் இரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்