தமிழர்களின் இருப்பிற்காக தமிழ் தேசிய கட்சிகளுக்கு மட்டும் வாக்களியுங்கள்!

Date:

தமிழ் மக்களின் இருப்பிற்கும் நிரந்தர அரசியல் தீர்வுக்குமாக தமிழ் தேசிய பற்றோடும் உணர்வோடும் பயணிக்கின்ற தமிழ்தேசிய கட்சிகளுக்கு மட்டும் உங்களுடைய பெறுமதியான வாக்குகளை அளியுங்கள்.

இவ்வாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுளின் சங்கம் தெரிவித்துள்ளது. இச் சங்கம் யாழ் ஊடக அமையத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின் போது இதனை தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய ஊடக சந்திப்பானது உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தழிழ் மக்கள் யாருக்கு வாக்களித்து வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பை வலுப்படுத்தலும் தமிழ் தேசியத்தை உறுதியாக நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பும் தமிழ் மக்களின் கைகளில்தான் இருக்கின்றது.

ஆகவே எமது ஒற்றுமையை இவ் உள்ளுராட்சி தேர்தலின் ஊடாக வெளிப்படுத்துங்கள் சென்ற காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள்,இப்போது ஆட்ச்சிக்கு வந்தவர்கள் இதுவரை காலமும் என்ன செய்தார்கள்? என்பது எல்லோருக்கும் தெரியும்.

நாம் மறக்கவும் மாட்டோம் , எமக்கு வாழ்வுரிமை வேன்டும் என்று எங்களால் தெரிவு செய்ய பட்டு எமது பெறுமதியான வாக்குகளை கொடுத்து அனுப்பப்பட்ட வர்களையும் ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் சிங்கள தேசிய அரசியல் கட்சிகளும், சிங்கள அரசும் ஏமாற்றி இருக்கின்றார்கள் தொடர்ந்தும் ஏம்மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம் ,

அதேபோல தான் தற்போது ஆட்சியில் இருக்கும் புதிய அரசாங்கமும் குறிகிய காலத்துக்குள் அது செய்வோம் இது செய்வோம் காணிகளை விடுவிப்போம் வேலைவாய்ப்பு வழங்குவோம் வீதிகளை திறப்போம் காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறிவதே எமது வேலைத்திட்டம் எனக்கூறி இப்போது மூண்றாவது தேர்தலையும் நடாத்தி முடிப்பதற்கு துரிதமாக வேலை செய்கிறார்கள்.

குறிகிய காலத்திற்குள் தேர்தலை முடிக்கிறார்களே தவிர தெருவில் கண்ணீரோடு நீதி கேட்டு நிற்கின்ற தாய்மாருக்கு என்ன உண்மையைக் கண்டறிந்து சொன்னாரா? என்ன தீர்வு என்ன பதில் தந்தார் ?எதுவுமே நடக்கப்போவது இல்லை.

ஆகவே இந்த நேரத்தில் உறவுகளே நீங்கள் விழிப்பாக இருங்கள் உள்ளுராட்சி தேர்தல் எங்களுக்குரிய தேர்தல் எங்கள் மாவட்டத்திற்கும் எங்களது கிராமத்திற்கும் உரித்தான தேர்தல் எமது உள்ளுராட்சி சபைகளுக்கு ஊடாக ஒரு குறைந்தளவு பிரதேச அபிவிருத்தியை மேம்படுத்தலாம்.

இந்த சபைக்கு ஊடாக பெறப்படும் பெருமளவு நிதி மக்களுடையது அப் பணம் அப் பிரதேச அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படவேண்டும்.

எனவே தமிழ் மக்களாகிய நாங்கள் சிங்கள கட்சியினருக்கும் சர்வதேசத்திற்கும் எமது ஒற்றுமையை எடுத்து காட்டும் முகமாக ஒட்டு மொத்த தமிழ் மக்களின் இருப்பிற்கும் நிரந்தர அரசியல் தீர்வுக்குமாக தமிழ் தேசிய பற்றோடும் உணர்வோடும் பயணிக்கின்ற தமிழ்தேசிய கட்சிகளுக்கு மட்டும்ய உங்களுடைய பெறுமதியான வாக்குகளை அளியுங்கள்.

எங்களுக்கான சபைகள் எமது கைகளுக்கு வரும் போதுதான் எமக்கான பலம் எமது கைக்கு வரும் ஆகவே மண்ணுக்காக மக்களுக்காக எம் இனத்தின் நிரந்தர விடுதலைக்காக பயணிப்பவர்களுக்கு உங்கள் பொன்னான வாக்கை அளித்து வெல்லவையுங்கள் என தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்