இந்த வருடத்தில் கடந்த 4 மாதங்களில் 38 துப்பாக்கிச் சூடுகளில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கொலைகளில் பெரும்பாலானவை மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் நடந்துள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன. போதைப்பொருள் கடத்தல் மற்றும் அவர்களை எதிர்க்கும் பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்களைக் கொல்வது ஆகியவை இந்த சம்பவங்களுக்கு வழிவகுத்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.




