16 வயதில் சாதனை… ஒரே ஆண்டில் க.பொ.த சாதாரண, உயர்தர பரீட்சைகளில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவி!

Date:

கொழும்பு விசாகா வித்யாலய மாணவி ரனுலி விஜேசிறிவர்தன, ஒரே ஆண்டில் க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தரத் பரீட்சைகளுக்கு தோற்றி, சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்.

ரனுலி மே 2024 இல் 2023 (2024) க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் தோற்றி, ஆங்கில இலக்கியத்தில் பி உடன் 8 ஏ மற்றும் 1 பி பெற்றார். நவம்பர் 2024 இல், அவர் கணிதப் பிரிவில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தோற்றி, 3 ஏ பெறுபேற்றை பெற்றார். நாடளாவியரீதியில் 963 வது இடத்தை பிடித்தார்.

தனது தரம் 10 படிப்பை முடிக்கும் போது, ​​ரனுலி ஒரே நேரத்தில் உயர்தர பாடத்திட்டத்திற்கும் தயாரானார். ஒரு குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட மாணவர்கள் பாடசாலை பரீட்சார்த்திகளாக உயர்தர பரீட்சைக்கு எழுத அனுமதிக்கப்படாததால், அவர் முறையான பாடசாலைப்படிப்பிலிருந்து விலகி, ஒரு தனியார் பரீட்சார்த்தியாக பரீட்சைக்கு தோற்றினார்.

20 வருட அனுபவமுள்ள ஆசிரியரான அவரது தந்தை, இலங்கையின் கல்வி முறை திறமையான மாணவர்கள் விரைவாக முன்னேற அனுமதிக்க வேண்டும் என்றார். இலங்கையில் பட்டதாரிகள் பெரும்பாலும் 26 அல்லது 27 வயதில் பணியிடத்தில் சேர்கிறார்கள். மற்ற நாடுகளில் இது 21 அல்லது 22 வயதாகும். குறைந்த வயதில் பட்டப்படிப்பை முடிப்பது, அவர்களுக்கு பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும் என்றும் அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

யாழ். இணுவில் சந்தியில் கோர விபத்து! துவிச்சக்கர வண்டியில் சென்ற 67 வயதுடையவர் பலி

யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் சம்பவ...

நெல் வயலில் விழுந்து உயிருக்குப் போராடும் 15 வயது காட்டு யானை

கிழக்கு வனவிலங்கு மண்டலம்  அம்பாறை வனவிலங்கு அலுவலகத்தின் கீழ் உள்ள வளத்தாப்பிட்டி...

உணவக உரிமையாளர் மரண வழக்கு: கைதான மாடல் ஷ்ரத்தா உள்ளிட்ட 3 பேர் கைது

உத்தர பிரதேச மாநிலம் லக்​னோ​வில் உணவக உரிமையாளர் சிவா சர்மா (28)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்