இன்று காலை 7.30 மணியளவில் ஹல்துமுல்ல நகருக்கு அருகில் கடவத்தையிலிருந்து பண்டாரவளை நோக்கிச் சென்ற கார் ஒன்றின் மீது பாறைகள் விழுந்து விபத்து நிகழ்ந்தது.
மலை உச்சியில் இருந்து உருண்டு வந்த பல பாறைகள் கார் மீது விழுந்ததால், பலத்த சேதம் ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த காரில் நான்கு பேர் பயணித்த போதிலும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை, கார் பலத்த சேதமடைந்தது.
கடவத்தையிலிருந்து பண்டாரவளைக்கு மோட்டார் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் இந்த விபத்தில் சிக்கினர்.
மலைகளில் இருந்து பாறைகள் விழும் அபாயம் உள்ளதால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்டுமாறு போலீசார் கேட்டுக்கொள்கிறார்கள்.




