கம்பஹாவில் துப்பாக்கிச்சூடு!

Date:

ஏப்ரல் 15 ஆம் திகதி இரவு கம்பஹா நகர பேருந்து நிலையம் அருகே துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

முதல்கட்ட தகவல்களின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், பயணித்துக் கொண்டிருந்த சிறிய ரக லொறி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

லொறியில் இருந்த இருவருக்கு காயம் ஏற்படவில்லை. சம்பவத்தின் போது அவர்கள் வாகனத்தை விட்டு வெளியேறி அருகிலுள்ள கடைக்குள் ஓடியதாக பொலிசார் தெரிவித்தனர்.

வாகனம் மட்டும் சேதமடைந்தது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.

சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய கம்பஹா பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வந்த ஒரே ஜனாதிபதி அனுரவாம்!

மட்டக்களப்பு, ஸ்ரீ மங்களாராமயவின் விகாராதிபதியான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கிழக்கு மாகாண...

வாகன, தங்க கடன்களுக்கான புதிய கடன் கட்டுப்பாடுகள்: இன்று முதல் நடைமுறை!

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்