அம்பன் விபத்தில் குடும்பஸ்தர் பலி

Date:

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் மரணமடைந்தார்.

குறித்த சம்பவம் சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளது.

கல் ஏற்றிச் சென்ற டிப்பர் ஒன்று மிக மெதுவாக சென்றுகொண்டிருந்த போது பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் அதன் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் மரணமடைந்தார்.

சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், டிப்பர் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை நீதிமன்றம் நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையம் எடுத்துச் சென்றுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் புதிய மனு

பிரச்​சா​ரத்​தின்​போது தனது ​படத்தை பயன்​படுத்​த தடை கோரி பாமக நிறு​வனர் ராம​தாஸ்...

இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம்; செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் திருப்பித்தர ஒப்புக்கொண்டது: ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மத்திய கிழக்கைப்...

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்