உள்ளூராட்சி தேர்தலுக்காக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சமர்ப்பித்து நிராகரிக்கப்பட்ட 11 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 10 உள்ளூராட்சி மன்றங்களுக்கும், மன்னாரில் மாந்தைக்குமாக- 11 உள்ளூராட்சி மன்றங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மாந்தையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.