30.9 C
Jaffna
April 29, 2025
Pagetamil
கிழக்கு

உழவு இயந்திர சாரதியாக ஆசைப்பட்ட 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி

வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்து சுழல் கலப்பையில் சிக்கி இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகத்திக்குளம் பிரதேச வயலில் இடம்பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை(22) அன்று மேற்படி பகுதியில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து தவறி 16 வயது இளைஞன் கலப்பையில் சிக்குண்டு பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்த இளைஞன் கண்ணகி கிராமத்தை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க பெ.ஜீரோசன் என அடையாளம் காணப்பட்டார்.

குறித்த இளைஞன் குடும்பத்தில் மூத்த பிள்ளை என்பதுடன் இரு சகோதரிகளுடன் வாழ்ந்து வருவதுடன் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பாடசாலையில் இருந்து இடைவிலகி பல்வேறு தொழில் புரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் உழவு இயந்திர சாரதியாக வேண்டும் எனும் ஆசையில் நெருங்கிய நண்ரொருவருடன் உழவு இயந்திரத்தில் பயிற்சி எடுத்து வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

அத்துடன் உழவு இயந்திரத்தின் சாரதியான உயிரிழந்தவரின் நண்பன் அக்கரைப்பற்று பொலிசாரிடம் சரணடைந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

-பாறுக் ஷிஹான்-

இதையும் படியுங்கள்

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயல்பட நாங்கள் முயற்சித்தோம்; கலையரசன் தடையாக இருந்தார்: ஹக்கீம்

Pagetamil

சம்பூரில் கடற்படை வசமுள்ள பொதுமக்கள் காணிகளை விடுவியுங்கள்!

Pagetamil

விபத்தில் 9 மாத குழந்தை உயிரிழப்பு!

Pagetamil

தேசிய மக்கள் சக்தி வேட்பாளரிடம் மன்னிப்பு கேட்ட தமிழரசு கட்சி வேட்பாளர்!

Pagetamil

கடந்த வாரம் திருமணம்… விளையாட்டு போட்டி ஏற்பாட்டில் இருந்த இளைஞனை பலியெடுத்த அதிவேக மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்!

Pagetamil

Leave a Comment