ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கை அமலாக்கத் துறை விசாரிக்கிறது: சிஐடி விசாரணையை திரும்ப பெற்ற கர்நாடக அரசு

Date:

நடிகை ரன்யா ராவ் மீதான தங்கக் கடத்தல் வழக்கை கையிலெடுத் துள்ள அமலாக்கத்துறை அதி காரிகள், இது தொடர்பாக பெங் களூருவில் 5 இடங்களில் நேற்று சோதனை நடத்தினர்.

கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான ரன்யா ராவ் (32) துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக கடந்த 3-ம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரி கள், அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.2.67 கோடி ரொக்கப்பணம், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கைப்பற்றினர்.

ரன்யா ராவிடம் நடத்திய விசா ரணையில், அவருக்கு சர்வதேச தங்கக் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந் தது. மேலும், சில முக்கிய பிர முகர்களுக்கும், பெரிய நகைக் கடை அதிபர்களுக்கும் தங்கம் கடத்திவந்து கொடுத்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் ரன்யா ராவ் மீது வழக்குப்பதிவு செய்து, மும்பை, பெங்களூரு விமான நிலையங்களில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், ரன்யா ராவ் மீது அமலாக்கத் துறை அதிகாரி கள் நேற்று புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கு தொடர்பாக பெங்களூரு வில் உள்ள லேவல்லி சாலை, எம்ஜி சாலை உட்பட 5 இடங் களில் சோதனை மேற்கொண் டனர். ரன்யா ராவுடன் தொடர் பில் உள்ள நபர்களுக்கு சொந் தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, கர்நாடக அரசு கடந்த 11-ம் தேதி, தங்கக் கடத் தல் வழக்கில் ரன்யா ராவின் வளர்ப்பு தந்தையும் போலீஸ் மஜிபியுமான ராமசந்திர ராவை விசாரிக்குமாறு சிஐடி போலீ ஸாருக்கு உத்தரவிட்டது. சிஐடி போலீஸார், பெங்களூரு விமான நிலைய சிசிடிவி கேமரா காட்சி களை சேகரித்து, அதன் அடிப் படையில் ராமசந்திர ராவை விசாரிக்க திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், கர்நாடக அரசு திடீரென சிஐடி விசாரணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இதற்கு கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா, “நாங்கள் தொடக்கம் முதலே இவ்வழக்கில் கர்நாடக அமைச்சர் ஒருவர் ரன்யா ராவை காப்பாற்ற முயற்சிக்கிறார் என கூறிவருகிறோம். அதனை காங்கிரஸார் மறுத்தனர். இப்போது கர்நாடக அரசு பிறப்பித்த சிஐடி விசாரணையை ரத்து செய்தது ஏன்? இந்த திடீர் முடிவுக்கு பின்னால் இருந்து அழுத்தம் கொடுத்தது யார்? இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகளும், அமலாக்கத் துறை அதிகாரிகளும் ஆழமாக விசாரித்தால் பல முக்கிய நபர்கள் சிக்குவார்கள் என தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...

போதைப்பொருளுடன் சிக்கிய மீன்பிடி படகு

தெற்கு கடலில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது, ​​பெருமளவு போதைப்பொருட்களை...

ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் நாசமாகிறது: ட்ரம்பை மறைமுகமாக சாடிய போப்!

போர்களுக்காக பில்லியன் கணக்கில் செலவழிக்கும் தலைவர்களை போப் கடுமையாகச் சாடியதோடு, "ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்