பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி யாழ்ப்பாணத்தில் கையெழுத்துக் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலையில் இப் போராட்டம் நடைபெற்றது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டுமெனக் கோரி மக்கள் பேரவைக்கான இயக்கம் நாடு முழுவதும் கையேழுத்துப் பெறுகின்ற போராட்டத்தை நடாத்தி வருகின்றது.
இதன் தொடராக யாழ்ப்பாணத்திலும் கையெழுத்து பெறும் போராட்டத்தை இன்று மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆட்சிக்கு வர முன்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டுமெனக் கோரி வந்த ஜேவிபியினர் இப்போது அந்தச் சட்டத்தை நீக்காமல் இருப்பதையும் கண்டித்துள்ள மக்கள் பேரவைக்கான இயக்கம் இந்தச் சட்டம் நீக்கப்படும் வரை தெடர்ந்தும் போரட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1