மேர்வினுக்கு விளக்கமறியல்

Date:

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நிலத்தை அபகரித்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மஹர நீதவான் நீதிமன்றம் இன்று மூன்று சந்தேகநபர்களையும் 2025 மார்ச் 17 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று பத்தரமுல்லையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தபோது குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் செய்தித் தொடர்பாளர் எஸ்எஸ்பி புத்திக மானதுங்க, இந்த வழக்கு தொடர்பாக மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.

போலியான பத்திரங்களைத் தயாரித்து கிரிபத்கொடவில் அமைந்துள்ள அரசு நிலத்தை தனியாருக்கு விற்றது தொடர்பான நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சரை சிஐடி கைது செய்ததாக எஸ்எஸ்பி மனதுங்க தெரிவித்தார்.

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், சிஐடி இந்த விவகாரம் குறித்து நீண்ட விசாரணையை நடத்தியதாக அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

மஹர சிறைக்கலவரத்தில் ஒருவர் பலி

சனிக்கிழமையன்று மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, ஒரு கைதி உயிரிழந்ததாகவும்,...

பேச்சாளர் மகாவிஷ்ணுவை காதலிப்பதாக நடிகை மிருணாளினி ரவி தகவல்

ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணுவை காதலிப்பதாக நடிகை மிருணாளினி ரவி தெரிவித்துள்ளார். இது குறித்து...

ஸ்​பெ​யினுக்​குள் ஊடுருவிய மொராக்கோ அகதிகள் உணவு இல்லாமல் மீண்டும் நாடு திரும்பினர்

ஸ்​பெ​யினுக்​குள் ஊடுரு​விய அகதி​கள் உணவு இல்​லாமல் மீண்​டும் சொந்த நாடான மொராக்​கோவுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்