விசாரணை அறிக்கைகள் மாயம் – நளிந்த ஜயதிஸ்ஸ

Date:

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக விசாரணை நடத்த 144 இலட்சம் ரூபா செலவிடப்பட்டு, அதற்காக விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்த போதிலும், அதன் அறிக்கைகள் காணாமலாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் நேற்று (27) தெரிவித்துள்ளார்.

அவரது கூற்றுப்படி, 2016ம் ஆண்டிலிருந்து மொத்தம் 14 விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அரச நிதி மோசடி, ஊழல் எதிர்ப்பு, அரசியல் பழிவாங்கல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்ய, மொத்தமாக 5,301 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான ஆணைக்குழுக்கள் எந்தவொரு அறிக்கைகளையும் வெளியிடாமல் காணாமலாகியுள்ளன.

நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுக்களும், அவற்றிற்கான ஒதுக்கப்பட்ட நிதிகளும்,
🔹 அரச நிதி மோசடி விசாரணை – 662.34 இலட்சம் ரூபா
🔹 காணாமலானோர் தொடர்பான விசாரணை – 144.56 இலட்சம் ரூபா
🔹 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை – 1063 இலட்சம் ரூபா
🔹 ஊழல் எதிர்ப்பு விசாரணை – 350 இலட்சம் ரூபா
🔹 அரசியல் பழிவாங்கல் விசாரணை – 842 இலட்சம் ரூபா
🔹 சுங்கத் திணைக்களம் மீதான விசாரணை – 318 இலட்சம் ரூபா

இவ்வாறாக, விசாரணைக்காக குழுக்கள் நியமிக்கப்படடதோடு, அவற்றிற்காக நிதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த விடயம் சார்ந்து அறிக்கைகள் ஏதும் வெளியிடப்படாமல் காணாமலாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும், 2022 மே 09 சம்பவம் தொடர்பாக மட்டும் விரைவாக விசாரணை நடத்தப்பட்டு, அறிக்கையும் வெளியிடப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாக தொகையும் வழங்கப்பட்டதாகவும், இதனால் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளில் பல்வேறு ஐயங்கள் எழுகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இதேவேளை, பல ஆண்டுகளாக அரச நிதி செலவிட்டு விசாரணை நடத்தப்பட்டும், அவற்றின் அறிக்கைகள் எதுவும் வெளிவராதது குறித்து விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றார் இந்திய துணை ஜனாதிபதி: சீ.வீ.கே தகவல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக்...

இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்!

பயணிகளை இடைநடுவில் தனியார் பேருந்து இறக்கியதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்