வரலாற்றில் இன்று – பெப்ரவரி 27

Date:

நிகழ்வுகள்

380 – அனைத்து உரோமைக் குடிமக்களும் திரித்துவக் கிறித்தவத்தைத் தழுவ வேண்டும் என பேரரசர் முதலாம் தியோடோசியசு கேட்டுக் கொண்டார்.

425 – கொன்ஸ்தாந்திநேபிள் பல்கலைக்கழகம் பேரரசர் இரண்டாம் தியோடோசியசினால் நிறுவப்பட்டது.

907 – கித்தான் இனத் தலைவர் ஆபோஜி வடக்கு சீனாவில் பேரரசர் தைசூ என்ற பெயரில் லியாவோ அரசமரபைத் தோற்றுவித்தார்.

1560 – இசுக்கொட்லாந்தில் இருந்து பிரான்சியரை வெளியேற்ற இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

1594 – பிரான்சின் மன்னனாக நான்காம் என்றி முடிசூடினார்.

1700 – புதிய பிரித்தானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது.

1782 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்காவில் போரைத் தொடர்வதற்கு எதிராக பிரித்தானிய நாடாளுமன்றம் வாக்களித்தது.

1801 – வாசிங்டன், டீசி நகரம் அமெரிக்க காங்கிரசின் நிர்வாகத்தின் கீழ் வந்தது.

1844 – டொமினிக்கன் குடியரசு எயிட்டியிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1861 – போலந்தில் உருசிய ஆக்கிரமிப்பை எதிர்த்து வார்சாவாவில் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தியதில், ஐந்து பேர் உருசியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1898 – கிரேக்க மன்னர் முதலாம் ஜோர்ஜ் படுகொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.

1900 – பிரித்தானியத் தொழிற் கட்சி அமைக்கப்பட்டது.

1900 – இரண்டாம் பூவர் போர்: தென்னாபிரிக்காவில் பூவர்களின் தளபதி பியெட் குரோனியே நிபந்தனையின்றி சரணடைவதாக அறிவித்தார்.

1902 – இரண்டாம் பூவர் போர்: ஆத்திரேலிய இராணுவத்தினர் இருவர் போர்க்குற்றங்களுக்காக தென்னாப்பிரிக்கா, பிரிட்டோரியாவில் தூக்கிலிடப்பட்டனர்.

1933 – பெர்லினில் செருமனியின் நாடாளுமன்றக் கட்டடம் இடச்சு கம்யூனிஸ்டுகளால் தீ வைத்து எரிக்கப்பட்டது.

1939 – அமர்ந்துறை வேலை நிறுத்தங்கள் நில உரிமையாளர்களின் உரிமையை மீறுவதால், இவ்வகை வேலைநிறுத்தங்கள் சட்டவிரோதமானவை என ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1940 – ரேடியோகார்பன் என்ற கரிமம்-14 கண்டுபிடிக்கப்பட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: சாவகக் கடலில் இடம்பெற்ற சமரில் கூட்டுப் படைகளை ஜப்பான் படைகள் தோற்கடித்தன.

1943 – பெர்லினில், நாட்சிகளின் இரகசியக் காவல்துறையினர் செருமனியப் பெண்களை மணந்த 1,800 யூத இன ஆண்களைக் கைது செய்தனர்.

1943 – அமெரிக்காவின் மொன்ட்டானாவில் பெயர்கிரீக் நகரில் சுரங்கம் ஒன்று வெடித்ததில் 74 பேர் கொல்லப்பட்டனர்.

1951 – ஐக்கிய அமெரிக்காவில் அரசுத்தலைவர் ஒருவர் இருதடவைகளுக்கு மேல் போட்டியிட முடியாதவாறு அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.

1964 – பீசாவின் சாய்ந்த கோபுரம் மேலும் சரிவதைத் தடுக்க இத்தாலிய அரசு உதவி கோரியது.

1976 – முன்னாள் எசுப்பானிய நாடான மேற்கு சகாரா சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு என்ற பெயரில் விடுதலையை அறிவித்தது.

1991 – வளைகுடாப் போர்: அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் குவைத் விடுதலையானதாக அறிவித்தார்.

2002 – கோத்ரா தொடருந்து எரிப்பு: அயோத்தியாவில் இருந்து தொடருந்தில் திரும்பிக்கொண்டிருந்த 59 இந்துப் பயணிகள் கோத்ரா புகையிரத நிலையத்தில் வைத்து முசுலிம்களால் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் நடந்த கலவரத்தில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

2004 – 1995 டோக்கியோ மெட்ரோ தாக்குதல்களைத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட சோக்கோ அசகாரா என்ற மதக்குழுத் தலைவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இவரது மரணதண்டனை 2018 இல் நிறைவேற்றப்பட்டது.

2004 – பிலிப்பைன்ஸின் பயணிகள் கப்பலில் அபு சயாப் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பில் 116 பேர் கொல்லப்பட்டனர்.

2007 – மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கை விமானப் படையினரின் விமான ஓடுபாதையை நோக்கி விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் இலங்கைக்கான அமெரிக்க, இத்தாலியத் தூதுவர்கள் காயமடைந்தனர்.

2010 – சிலியில் 8.8 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 500 பேர் உயிரிழந்தனர்.

2013 – சுவிட்சர்லாந்தில் தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஐவர் கொல்லப்பட்டனர்.

2015 – உருசிய அறிவியலாளரும், அரசியல்வாதியுமான போரிசு நெம்த்சோவ் கிரெம்லின் அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

கறிவேப்பிலை பறித்தவர் உயிரிழந்தார்

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே...

கிளிநொச்சியில் திடீர் வாகனப் பரிசோதனை

கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினரின் உதவியுடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் செல்லும்...

எரிபொருள் விலை சிறிது அதிகரிக்கும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் அண்மைக்காலத்தில் எரிபொருள் விலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்