Pagetamil
இலங்கை

மனித உரிமை அலுவலகம் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் – ரணில்

மனித உரிமைகள் விசாரணைக்கு ஐ.நா. உதவி தேவையில்லை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளுக்காக எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் உதவியை நாடவேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஆசிய பிராந்திய அலுவலகம் மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவர் மேலும் கூறுகையில், இவ்வகையான அமைப்புகள் அரசியல் நோக்கத்துடன் செயல்படுகின்றன. தங்களுக்கு தேவையான நபர்களையும் அமைப்புகளையும் ஊக்குவித்து, இலங்கையை இலக்காக மாற்றியுள்ளதாக ரணில் விக்ரமசிங்க விமர்சித்துள்ளார்.

இதேவேளை, உலகளாவிய முக்கிய நிகழ்வுகள் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (27) வின் புதுடெல்லிக்கு செல்ல உள்ளமை குறிப்பிடத்தக்கது..

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சந்தேகநபர்களை கைது செய்ய வேண்டாமென அறிவித்தல்

Pagetamil

பட்டலந்த கொடூரம் பற்றி ரணிலின் விளக்கம்

Pagetamil

மழை, மின்னல் எச்சரிக்கை

Pagetamil

மக்கள் பணத்தை எப்படியெல்லாம் ஏப்பமிட்ட ரணில்: வெளியான அதிர்ச்சி தகவல்!

Pagetamil

பிள்ளையான்- வியாழேந்திரன் உள்ளூராட்சி தேர்தலில் கூட்டணி

Pagetamil

Leave a Comment