மனித இனத்தின் அடுத்த கால கட்ட வாழ்விடமாக செவ்வாய் கிரகம்?

Date:

செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடல் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனித இனத்துக்குப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில், செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பூமிக்கு அடுத்தபடியாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் பல ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது அந்த நீர் ஒரு காலத்தில் கடலாக இருந்து இருக்கலாம் என்பதற்கான உறுதிப்படுத்தல் கிடைத்துள்ளது.

2018ம் ஆண்டு, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது கியூரியாசிட்டி ரோவர் கருவியை செவ்வாய் கிரகத்தில் இறக்கி ஆய்வு மேற்கொண்டது. அப்போது, 30 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கரிமப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், எதிர்வரும் 20 ஆண்டுகளில் மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் குடியேறுவது சாத்தியமுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஜூராங் ரோவர் கருவி, செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை படிமங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. இதன் மூலம், செவ்வாய் கிரகம் ஒருகாலத்தில் பெரும் நீர்மண்டலத்தை கொண்டிருந்ததற்கான கூடுதல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

ஆனால், அந்தக் கடல் நீர் பூமியில் உள்ள கடல் நீரைப் போன்று உப்புத்தன்மை கொண்டதா? அல்லது குடிக்கத் தகுந்த நன்னீராக இருக்குமா?” என்பது உறுதி செய்யப்படவில்லை. இந்தக் கண்டுபிடிப்பானது, செவ்வாய் கிரகத்தில் நீர் நிலையான ஒரு வளமாக இருந்ததா? அல்லது அது காலப்போக்கில் மாயமாகிவிட்டதா? என்பது குறித்த மேலும் பல ஆய்வுகளுக்கு வழிவகுக்கிறது.

இந்த தகவல்கள் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், மனித இனத்தின் அடுத்த கால கட்ட வாழ்விடம் குறித்து புதிய கூற்றுகளையும் முன்வைக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

நடு வீதியில் வாளுடன் அட்டகாசம் செய்த 3 பேருக்கு விளக்கமறியல்

திவுலபிட்டிய நகரில் பேருந்து ஓட்டுநர் மீது வாளால் தாக்குதல் நடத்த முயன்ற...

நீதிபதிகள் ஓய்வு வயது சர்ச்சை: ஜனாதிபதி- சட்டத்தரணிகள் சந்திப்பு சர்ச்சை!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட...

இந்தியாவின் 80வது சுதந்திரதினம்

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்