குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன் அதிகரித்த பொலிஸ் பாதுகாப்பு

Date:

நாமல் ராஜபக்ஷ முன்னிலையானதை தொடர்ந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன் பதற்றமான சூழல் உருவாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எயார் பஸ் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (26.02.2025) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

இந்நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்பு பெருந்தொகையான மக்கள் கூடி பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை காரணமாக, சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பு நிலவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, அங்கு பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் அதிக அளவில் பொலிஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவ இடத்தில் யூடியூப் சேனல் வைத்திருக்கும் லாலுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அங்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அவர்களை சமாதானப்படுத்தி அமைதியை பேணுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், வாக்குவாதம் ஏற்படுத்திய நபர், “நாங்கள் நாமல் ராஜபக்ஷவை ஆதரிக்க வந்த குழுவாக இல்லை” என பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போதைய நிலைமைக்கேற்ப, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்பாக இன்னும் மக்கள் திரண்டுக்கொண்டிருப்பதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...

தையிட்டி விகாரைக்குள் சிக்கிய காணி மீட்பு விவகாரம்: 21ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான...

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று நாம் தமிழர் கட்சியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்