பத்தரமுல்ல மற்றும் ஜெயந்திபுர பகுதிகளில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கடந்த சனிக்கிழமை (22) முதல் நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
நீர் வழங்கல் தடை காரணமாக அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் தாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய வறண்ட வானிலை நிலைமையால் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொது மேலாளர் டி. பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அதை மீட்டெடுப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், அதுவரை, பவுசர் மூலம் அப்பகுதிக்கு தண்ணீர் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.




