கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் ஐஸ்போதைப்பொருளுடன் கைது

Date:

கூரிய ஆயுதத்தால் ஒருவரை தாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட்டுள்ளனர்.

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் புளூமெண்டல் ரயில் பாதைக்கு அருகில் நேற்று (24) பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, 12 கிராம் 400 மில்லிகிராம் மற்றும் 10 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், புளூமெண்டல் மற்றும் கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 31 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேகநபர்கள் மீது மேற்கொண்ட விசாரணையில், கடந்த 18ம் திகதி இரவு புளூமெண்டல் ரயில் பாதைக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் ஒருவரை தாக்கி கொலை செய்த சம்பவத்துடன் அவர்கள் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

தற்போது, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த...

நாளையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம்

வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த மின்சாரத் தேவை மற்றும் அதிக சூரிய மின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்